Saturday, December 19, 2009

சங்க காலத்தில் தமிழ் இணையம்

உத்தமம் தமிழ்நாடு அரச தயவில் அலுவலகம், இதழ், மாநாடு எல்லாம் நடத்த 2009 இணணய மாநாட்டில் கோரிக்கை விடுத்ததை அடுத்து உத்தமத்தை அரசின் ஒரு அங்கமாக ஆக்க நடவடிக்கைகள் சிறபாக நடைபெற்று வருகின்றன. நடக்க இருக்கும் உலகத் தமிழ்ச் செத்தமொழி மாநாட்டில் ஒர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடைபெறும். சங்க காலத்தில் தமிழ் இணையம் இருந்திருக்கலாம் என்று செம்மொழிப் புலவர்களின் ஆராய்சி முடிவுகள் 2010 மாநாட்டில் நிறுவப்படும்.

செம்மொழி மாநாடு டிவிட்டரில் நடத்தப்படும்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்க போதிய காலம் காணாது
என்பதை பொய் என நிறுவ டிவிட்டரில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்படும் என்று உலகத் தமிழ்ச் செத்தமொழி மாநாட்டு தலைமைக் குழு அறிவித்துள்ளது. கட்டுரைகள் 150 எழுத்துக்களுக்கு மேலே இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட்மாட்டாது. டிவிட்டரில் தமிழ் இரண்டாம் நிலையாமே.

உலகத் தமிழர்களுக்கு வணக்கம்

உலகத் தமிழர்களுக்கு வணக்கம். இந்த வலைப்பதிவு உலகத் தமிழ் செத்தமொழி மாநாடு பற்றியதாகும். தமிழை வெல்ல வைப்போம்.